Thursday, 11 June 2015

புகலிடக் கோரிக்கையாளர்கள் தகவல்களை திரட்டும் அரசாங்கம்.

idp
இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை திரட்டி வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் படகு மூலம் சென்றவர்களை அந்நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்திருந்தனர். திருப்பி அனுப்பியவர்கள் இந்தோனேசிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
65 பேரைக் கொண்ட இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் 54 பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஸினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படை, அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம், நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் ஆகியனவற்றிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...