Friday, 5 June 2015

இந்தியா முழுக்க மேகிநூடுல்ஸ் கடைகளில் இருந்து அகற்றம்

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மேகி நூடுல்ஸ்
இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மேகி நூடுல்ஸ்
இந்தியாவில் மேகி நூடில்ஸில் கலந்திருக்கும் நச்சுப்பொருட்கள் தொடர்பில் எழுந்த அச்சத்தையடுத்து, நெஸ்லே நிறுவனம், தமது தயாரிப்பான மேகி நூடுல்ஸை கடைகளிலிருந்து திரும்பப்பெறத் தொடங்கியுள்ளது.
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் காரீயம் இருப்பதாக சோதனைகள் காட்டியதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்கள் அந்த நூடுல்ஸுக்கு தடை விதித்துள்ளன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ் விற்பனையை சிங்கப்பூரும் நிறுத்தி வைத்துள்ளது.
தங்களின் நூடுல்ஸ் பாதுகாப்பானவை தான் என்று தெரிவித்துள்ள நெஸ்லே நிறுவனம், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறும் “குழப்பத்திற்காக” மட்டுமே இந்த நடவடிக்கையை தான் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
மேகி நூடுல்ஸ் குறித்து தற்போது எழுந்துள்ள கவலைகள் தீர்க்கப்பட்ட உடனேயே மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நூடுல்ஸ் சந்தையில் எண்பது சதவீதம் பங்கை மேகி நூடுல்ஸ் தான் வகிக்கிறது.
Loading...