Sunday, 28 June 2015

ரவுப் ஹக்கீமுக்கு ஆப்பு !



இம் முறை பொதுத் தேர்தலில் ரவுப் ஹகீம் அவர்கள் தேர்தலில் கண்டியிலோ அல்லது கிழக்கிலோ படு தோல்வி அடைவது நிச்சயம் என்றும் ,ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கக் கூடிய பெரும் வெற்றி அடையும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.இதன் படி ஒரு வேளை  ரவுப் ஹகீம் அவர்கள் வெற்றி அடைந்தாலும் அவருக்கு இனிமேல் அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப் படக் கூடாது என்றும் பின்வரும் காரணங்களை முன் வைக்கின்றன அதாவது ராஜபக்ச அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்து கொண்டு சர்வதேசத்துக்கு நீதி இல்லா ஒரு  நாட்டில் நான் நீதி அமைச்சர் என்று தன் தாய் நாட்டைக் கொச்சைப் படுத்தியமை , தற்போதுள்ள அரசில் அமைச்சராக இருந்து கொண்டு அமைச்சர்கள் அவையில் தன்னால் ஒன்றும் பேச முடியாதுள்ளது  என்றும் அமைச்சர் சபையை கொச்சைப் படுத்தியமை ,தன் சுய நலம் கருதி இனவாதத்தைத் தூண்டும் அறிக்கைகளை அப்பாவி முஸ்லிம் சமுகத்தின் முன் பரப்புவர்  மேலும் ரவுப் ஹகீம் அவர்கள் ஒரு குளப்படிக் காரர் எனவும் முத்திரை குத்தியுள்ளனர் . 


இர்பான் முகமத் -கொழும்பு 
Loading...