Tuesday, 23 June 2015

சோபித தேரர் எமக்கு ஒத்தாசையாக இருப்பதாக தெரிவித்தார்-- ரிசாத் பதியுதீன்


சோபித்த தேரரை நேற்று நாங்கள் சந்தித்தோம். அதன்போது 20வது தேர்தல் திருத்த வர்த்தமானி அறிவித்தலை உடன் வாபஸ் வாங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினோம்.

அத்தோடு ஜனாதிபதியாக மைத்திரியை உருவாக்குவதற்கு பாடுபட்ட கட்சிகளை புறம் தள்ளும் விதமாகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி இந்த யோசனையையும் வர்ததமானி அறிவித்தலையும் முற்றாக நிராகரிக்கின்றோம் என்று திட்டவட்டமாக அறிவித்தோம்.

அதற்கு அமைய வனக்கத்திற்குரிய சோபித தேரர் எமது நிலைப்பாடுகளை பூரணமாக ஏற்றுக்கொண்டு எமது நிலைப்பாட்டுக்கு என்றும் ஒத்தாசையாக இருப்பதாகவும் இது தொடர்பில் அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.

இது எமக்கு கிடைத்த முதல் வெற்றியாக நாங்கள் பார்க்கின்றோம். எனஅ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்
Loading...