Friday, 5 June 2015

இரத்­ம­லா­னை­யி­லுள்ள இலங்கை விமா­னப்­படை நூத­ன­சா­லை

Joseta

இரத்­ம­லா­னை­யி­லுள்ள இலங்கை விமா­னப்­படை நூத­ன­சா­லையில் “லிஹி­னியா” விமானம் நேற்று பொது­மக்­களின் பார்­வைக்கு திறந்­து­வைக்­கப்­பட்­டுள்ளது.
அண்மையில் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து, இது பற்றிய சர்ச்சைகள் தோன்றியிருந்தன.
விமானப்படையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ள விமானம், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்­நிகழ்வில் பாது­காப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.
லிஹி­னியா விமா­ன­மா­னது புகழ்­பெற்ற பொறி­யி­ய­லா­ளரும் கண்­டு­பி­டிப்­பா­ளரும் விமா­னி­யு­மான கலா­நிதி றே விஜே­வர்­த­ன­வுக்கு ஒரு காலத்தில் சொந்­த­மாக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
விமா­னப்­படைத் தள­பதி எயார் மார்ஷல் கே.ஏ.குண­தி­லக்க மற்றும் காலஞ்­சென்ற கலா­நிதி றே விஜே­வர்­த­னவின் குடும்­பத்­தி­னரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டனர்.
இவ்­வி­மா­னத்தை பொது­மக்­களின் பார்­வைக்­காக வழங்­கிய றே விஜே­வர்­த­னவின் குடும்­பத்­தி­னரை பாராட்டி, அவ்­வி­மா­னத்தின் மாதி­ரி­யொன்றை அக்­கு­டும்ப அங்­கத்­த­வர்­க­ளுக்கு பாது­காப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன வழங்­கினார்.
றே விஜே­வர்­தன என அழைக்­கப்­படும் பிலிப் றேவத்த விஜே­வர்­தன 1924 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்­தவர்.
பிரிட்­டனின் கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்கழகத்தில் உய­ர்­கல்வி கற்ற அவர், மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்­த­ராக 2002 முதல் 2007 ஆம் ஆண்­டு­வரை பதவி வகித்தார்.
லிஹி­னியா என பெய­ரி­டப்­பட்ட விமா­ன­மா­னது அமெ­ரிக்­காவில் தயா­ரிக்­கப்­பட்ட கிட்பொக்ஸ் 2 ரக விமா­ன­மாகும்.
அவ்­வி­மா­னத்தை பாகங்­க­ளாக பிரித்து இலங்கைக்கு கொண்டு வந்த கலாநிதி றே விஜேவர்தன அவற்றை தானே சுயமாக ஒன்றிணைத்து விமானத்தை உருவாக்கினார். 2010 ஆம் ஆண்டு அவர் காலமானார்.
Joseta 01
Loading...