Saturday, 20 June 2015

முகமது நபி கேலிச் சித்திரங்கள் நெதர்லாந்து தொலைக்காட்சியில்: வில்டர்ஸ்

கியர்த் வில்டர்ஸ்
கியர்த் வில்டர்ஸ்
இறைதூதர் முகமதுவைக் காட்டும் கேலிச் சித்திரங்களை நெதர்லாந்து தொலைக்காட்சிகளில் சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்போவதாக டென்மார்க்கின் தீவிர வலதுசாரி அரசியல்வாதி கியர்த் வில்டர்ஸ் கூறுகிறார்.
அரசியல் கட்சிகளுக்கென ஒதுக்கப்படும் ஒரு ஒளிபரப்பு நேரத்தில், தான் இதனைச் செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இந்த கேலிச் சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு துப்பாக்கிதாரிகளை காவலர்கள் சுட்டுக்கொன்றிருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் வில்டர்ஸ் உரையாற்றியிருந்தார்.
முஸ்லிம்களின் புனித ரமலான் மாதம் துவங்கியுள்ள ஒரு நேரத்தில் இந்த ஒளிபரப்பு நடக்கிறது.
பல நாடுகளிலும் டச்சுத் தூதரகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Loading...