Sunday, 14 June 2015

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் குடும்ப பின்னணி பற்றி ஆராய்வு


















வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் குடும்பப் பின்னணி பற்றி ஆராயப்படவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் சகல பெண்களினதும் குடும்பப் பின்னணி பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீட்டுப் பணிப் பெண்களாக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களிடம் மட்டுமே முன்னதாக இந்த அறிக்கை கோரப்பட்டிருந்தது.
2012ம் ஆண்டு முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது.
ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகளை உடைய தாய்மார் வெளிநாடு செல்வதனை தடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டது.
வேறும் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்கள் ஐந்து வயதுக்கும் குறைவான தமது பிள்ளைகளை விட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவிற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

Loading...