Saturday, 6 June 2015

ரமலான மாத பழக்கங்களும்… சடங்குகளும்..

புனிதமான ரமலான் மாதத்தில் விரதம் இருப்பது இஸ்லாமிய மதத்தின் மிகவும் பிரபலமான செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு மாத காலத்திற்கு, சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை, ஒவ்வொரு முகமதியரும் பின்பற்றும் விரதமாக இது உள்ளது.
ரமலான் விரதம் மனிதனை இறைவனுடன் இணைக்கிறது மற்றும் சாத்தானின் தூண்டுதல்களிலிருந்து விலக்கி வைக்கிறது என்று சொல்ப்படுகிறது.
இறைதூதர் முகமதுவை பெருமைப்படுத்துவதற்காக ரமலான் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையான அறிவின் ஒளியை உலகிற்குப் பரப்புவதற்காக கடவுளால் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். இதன் காரணமாகவே மக்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருக்கவும் மற்றும் அனைத்து விதமான மோசமான விஷயங்களை செய்யாமலும் இருக்கின்றனர்.
ஒருவருடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில், அவருடைய உணவு மற்றும் பானங்களை சாப்பிடாமல் இருப்பதையே ரமலான் எனலாம். ஒருவர் இதை ஒரு முறை செய்யத் தொடங்கி விட்டால், கெட்டதாக கருதப்படும் அனைத்து விஷயங்களிலிருந்துமே அவர் விலகி இருக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கியமான விதிமுறையாகும்.
இதில் அனைத்து வகையான போதைப்பழக்கங்கள், உடலுறவு மற்றும் மனிதர்களுக்கு தீங்கானவை என்று கருதப்படும் எல்லா விஷயங்களுமே அடங்கும். ஒவ்வொரு மதத்திற்கும் சொந்தமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவை இருப்பதைப் போலவே, இஸ்லாமிய மத்திலும் ரமலான் மாதத்தில் மிகவும் உன்னிப்பாகப் பின்பற்றப்படும் பழக்கங்களும், சடங்குகளும் உள்ளன.
இந்த சடங்குகள் இறைவழிபாட்டை வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், விரதத்தை எப்படித் தொடங்க வேண்டும் மற்றும் எப்படி முடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றன. ரமலான் மாதத்தில் பின்பற்றப்படும் சில சடங்குகளைப் பற்றி இங்கு பார்ப்போம்
சேஹ்ரி 
அதிகாலையில் பின்பற்றப்படும் முதல் சடங்காக சேஹ்ரி அல்லது சஹுர் உள்ளது. விரதத்தைத் துவங்கும் முன்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் காலை நேர சிற்றுண்டியை தான் சேஹ்ரி என்றழைக்கிறார்கள். தன்னுடைய உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் காக்கும் திறனுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட உணவாக சேஹ்ரி உணவு சொல்லப்படுகிறது.
தூவா ஓதல் 
சேஹ்ரியை சாப்பிட்ட பின்னர், அவர் இறைவனின் பெயரால் தூவா என்ற பிரார்த்தனையை ஓத வேண்டும்.
நாள் முழுவதும் விரதம் இருத்தல் 
அதற்குப் பின்னர், அந்த மனிதர் நாள் முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மிகவும் கடுமையாக விரதத்தை கடைப்பிடிப்பார். அந்த மனிதர் தன்னுடைய எல்லா விதமான போதைப் பழக்கங்களையும் விரதத்தின் போது தவிர்ப்பார்.
தொழுகை நடத்துதல் 
பகல் நேரத்தில் அந்த மனிதர் தொழுகையை நடத்த வேண்டும் மற்றும் புனித குரானின் வசனங்களை ஓத வேண்டும்.

அந்தி வேளையில் தொழுகை
பொழுது சாயும் வேளையில், விரதத்தை முடிக்கும் முன்னதாக அந்த மனிதர் நமாஸ் (தொழுகை) நடத்தி விரதத்தை முடிக்க வேண்டும்.
விரதத்தை முடித்தல்
பிராத்தனைகளை செய்து முடித்த பின்னர், அவர்/அவள் தன்னுடைய விரதத்தை தண்ணீரைக் குடித்தும் மற்றும் ஹாலல் செய்த பேரீட்சைகளை சாப்பிட்டும் முடித்து வைக்க வேண்டும்.
இப்தார் 
விரதத்தை முறையாக முடித்து வைத்த பின்னர், அவர்/அவள் பல்வேறு விதமான பதார்த்தங்களை உடைய இப்தார் உணவு விருந்தை சாப்பிட வேண்டும். அது அசைவ உணவாக இருந்தால், கண்டிப்பாக ஹலால் செய்யப்பட்டிருக்க வேண்டும். சர்க்கரை, அல்வா, திராட்சைப் பழம், ராக் மிட்டாய் மற்றும் பால் அல்லது தண்ணீர் போன்ற இனிப்பான உணவுகளைக் கொண்டு விரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான  நோன்பின் மாண்பை பேணுவோம்
நோன்பு வெறு­மனே பசித்­தி­ருப்­பது மாத்­தி­ர­மல்ல ஒரு மனிதன் தனது ஐம்­பு­லன்­க­ளையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வதே நோன்பின் பிர­தான கோட்­பா­டாகும். இதனை அல்லாஹ் தனது அருள் மறையாம் குர் ஆனில் இவ்­வாறு கூறு­கிறான்.
‘உங்­களின் முன்­னோ­ருக்கு விதி­யாக்­கப்­பட்­டதைப் போன்று உங்­க­ளுக்கும் நோன்பு விதி­யாக்­கப்­பட்­டுள்­ளது. பெரு­மானார் (ஸல்) அவர்கள் அரு­ளி­ய­தாக ஹஸ்ரத் சல்மான் (ரலி) அறி­விக்­கின்­றார்கள். ஷஃபான் மாத இறு­தியில் ஒரு நல் உப­தேசம் செய்தார்.
மனி­தர்­களே! உங்­க­ளிடம் ஓர் மகத்­தான மாதம் வரு­கின்­றது. இது பரக்கத் பொருந்­திய மாத­மாகும். இதில் லைலதுல் கத்ர் என்ற ஓர் இரவு இருக்­கி­றது. அது ஆயிரம் மாதங்­களை விட சிறந்த இர­வாகும். இதில் நோன்பு நோற்­பதை அல்லாஹ் கட­மை­யாக்­கி­யுள்ளான். அத­னு­டைய இரவு நேரங்­களில் நின்று (தராவீஹ்) தொழு­வது நன்­மைக்­கு­ரிய செய­லாக ஆக்­கி­யுள்ளான்.
எந்த மனிதர் இம் மாதத்தில் ஒரு நற்­செ­யலை செய்து அல்­லா­ஹுத்­தா­லாவை நெருக்­கத்தை உண்­டாக்கிக் கொள்­கி­றாரோ அவர் றமழான் அல்­லாத மற்ற மாதங்­களில் ஒரு பர்ழை நிறை­வேற்­றி­யவர் போலாவார். மேலும் இம் மாதத்தில் ஓர் பர்ழை நிறை­வேற்­றி­யவர் றமழான் அல்­லாத மாதங்­களில் எழு­பது பர்­ழு­களை நிறை­வேற்­றி­யவர் போலாவார். இம் மாதம் பொறு­மையின் மாத­மாகும். பொறு­மையின் பிர­தி­பலம் சுவர்க்­க­மாகும்.
எனவே, நாம் நோன்பு நோற்று வாயையும் வயிற்­றையும் கட்­டுப்­ப­டுத்­து­வது போல எமது இதர உறுப்­பு­க­ளையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் நோன்பின் பலா­பலன் எம்மைச் சேரும். நல்­லதை பேசி நல்­லதை செய்து இதர மனி­தர்­க­ளுடன் சுமு­க­மா­கவும் சுக துக்­கங்­களில் பங்கு கொள்­வ­தாலும் அல்லாஹ் தந்­த­வற்றில் ஏனை­யோ­ருக்கு வழங்­கு­வ­தாலும் பரக்கத் எனும் அபி­வி­ருத்­தி­யினை அல்லாஹ் வழங்­கு­கிறான்.
எந்த மனி­த­ரேனும் ஒரு நோன்­பா­ளியை நோன்பு திறக்கச் செய்­கி­றாரோ அவ­ரு­டைய பாவங்கள் மன்­னிக்­கப்­ப­டு­கின்­றது. நரக நெருப்­பி­லி­ருந்து அவர் விடு­த­லை­யாக கார­ண­மா­கி­றது. இது மாத்­தி­ர­மல்ல. நோன்பு நோற்­ற­வ­ரு­டைய நன்மையை போன்று நன்­மையும் கிடைத்து விடு­கின்­றது.
எனினும் நோன்­பா­ளி­யு­டைய நன்­மை­யி­லி­ருந்து எதுவும் குறைக்­கப்­ப­ட­மாட்­டாது என அண்ணல் நபி (ஸல்) கூறிய போது ஸஹா­பாக்கள் யார­ஸூ­லுல்லாஹ் எங்­களில் நோன்பாளி­களை நோன்பு திறக்கும் சக்தி பெற்­ற­வர்கள் இல்­லையே என்ற போது றஸூல் (ஸல்) அவர்கள் வயிறு நிறைய உண­வ­ளிக்க வேண்டும் என்­ப­தில்லை. மாறாக ஒரு பேரீத்­தம்­பழம் அல்­லது ஒரு மிடர் தண்ணீர் அல்­லது ஒரு மிடர் பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு நோன்பு துறக்கச் செய்­தாலும் அவ­ருக்கு அல்லாஹ் இந்த நன்­மையை வழங்கி விடுவான் என்று கூறினார். இம்­மா­தத்தின் முதற் பகுதி ரஹ்­ம­த்து­டை­ய­தா­கவும் நடுப் பகுதி பாவ மன்­னிப்­பா­கவும் இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடு­விப்­ப­தாக இருக்­கின்­றன.
எவ­ரேனும் இம் மாதத்தில் தன் அடி­மைகள், வேலைக்காரர்­களின் வேலைப் பளுவை குறைப்­பாரோ அவரை அல்லாஹ் மன்­னித்து நரக விடு­த­லையும் அளித்து விடுவான் எனவும் அரு­ளி­னார்கள். எனவே தான் றமழான் மாதத்­திற்கு முன்­னரே அதா­வது, ஷஃபான் மாத இறு­தி­யி­லேயே ரஸூ­லுல்­லாஹி (ஸல்) அவர்கள் புனித மிகு றமழான் நோன்பின் சிறப்பு பற்றி கூறி­னார்கள்.
எனவே, நாமும் புனித நோன்பு மாதத்­தினை ஒரு வினா­டி­யேனும் வீணாகக் கழிக்­காது வீணான விளை­யாட்­டிலும், வீண் பேச்­சுக்­க­ளிலும், தொலைக்­காட்­சி­யிலும் இதர பொழுது போக்­கு­க­ளிலும் ஈடு­ப­டாது ஐந்து வேளைத் தொழு­கை­களை இமாம் ஜமா­அத்­துடன் தொழுது, இதர சுன்­னத்­தான நபீ­லான தொழு­கை­களில் ஈடு­பட்டு திக்ர், ஸல­வாத்து, ஸ்திஃபார் எனும் பாவ­மன்­னிப்பு, குர்ஆன் திலாவத் போன்ற இன்­னோ­ரன்ன நல்ல அமல்­களில் ஈடு­பட்டு வரு­வ­துடன் நோன்பின் மாண்பைப் பேணி இரட்­டிப்பு நன்­மை­களைப் பெறு­வோ­மாக.
இது தவிர, ஏழை­யோரின் துயர் துடைக்­க­வென எம் மீது விதிக்கப்பட்ட ஸகாத் எனும் ஏழை வரியினை முறையாக கணக்கிட்டு வழங்கி எமது பொருட்களிலும் வாழ்க்கையிலும் பரக்கத்தினையும் அபிவிருத்தியினையும் பெற்று, நோன்பின் பலா பலன்களை முழுமையாகவும் முறையாகவும் பெற்ற நல் மக்களாக எமை ஆக்கி அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
– எம்.ஏ.எம்.ஹஸனார்
Loading...