Tuesday, 23 June 2015

எதிர் வரும் பொதுத் தேர்தலில் விழிப்புடன் செயல் படுங்கள்

பொருளாதார நெருக்கடிக்குள்ளும்,பிரதேச சமூக இன வேறு  பாடுகளுடனும் சின்னா பின்னப் பட்டு வறுமையோடு நாம் வாழ்வதற்கு ஒரே காரணம், சரியாகத் திட்ட மிடத் தெரியாத ஆட்சியாளர்கள்தான். நம் நோய் தீர, திறமையான மருத்துவரையே நாடுவோம். நன்றாகப் பேசத் தெரிந்தவரா? கவர்ச்சியான தோற்றம் உள்ளவரா ? பண வசதி படைத்தவரா என்று அப்போது நாம் பார்ப்பது இல்லை. ஆனால், நம் விதி எழுதும் தேர்தல் களத்தில் ஆட்சிக் கலையில் தேர்ந்தவரா என்று ஆராயாமல், 'அடுக்கு மொழியில் பேசத் தெரிந்தவரா? கண்ணுக்கு அழகாகக் காட்சி தருபவரா? பண வசதி படைத்தவரா? என்று மயங்கி நிற்கிறோமே, அதுதான் நம்முடைய மாபெரும் பிழை.எப்படியாவது அதிகார நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்ள ஓர் அணியும், இழந்த நாற்காலியை மீண்டும் அடைவதற்கு மற்றோர் அணியும் உங்களுக்கு ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளிவிடும்,எதிர் வரும் பொதுத் தேர்தலில்  விழிப்புடன் செயல் படுங்கள் 

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி

Loading...