நியூயார்க்: பல கட்ட சோதனைக்கு பிறகு பறக்கும் தட்டு சோதனையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பறக்கும் தட்டு வடிவிலான கலம் ஹவாயியன் தீவு கடற்கரைப் பகுதியில் பலூன் மூலம் 1.20 லட்சம் அடி உயரத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. பின்னர் இயந்திரம் மூலம் 1.80 லட்சம் அடி உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு செவ்வாய் கிரகத்தைப்போலவே லேசான வளிமண்டலத்தில் இப்பரிசோதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பசிபிக் கடல்பகுதியில் பறக்கும் தட்டு தரையிறக்கப்பட்டது.
குறைந்த அழுத்த சூப்பர்சானிக் எதிர்முடுக்கி (எல்டிஎஸ்டி) திட்டத் தின் கீழ் மூன்று பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன. தற்போது மேற்கொள்ளப்பட்டது 2-வது பரிசோதனை ஆகும். கடந்த ஆண்டு சோதனையும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் 20 முதல் 30 மெட்ரிக் டன் எடையுடன் தரையிறங்கும் தொழில்நுட் பத்தை நாசா முயற்சி செய்து வருகிறது.
