Saturday, 6 June 2015

பெண்ணாக மாறிய கிம் கர்டாஷியனின் வளர்ப்புத் தந்தை ஒபாமாவின் சாதனையை முறியடித்தார்

ட்விட்டரில் கணக்கொன்றை ஆரம்பித்த 4 மணித்தியாலங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோரை பின் தொடர்பவர்களாகப் பெற்று (Followers) அமெரிக்காவைச் சேர்ந்த கேட்லின் ஜென்னர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
கேட்லின் ஆணாக இருந்து தற்போது பெண்ணாக பால்நிலை மாற்றம் பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 18 ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஒபாமா ட்விட்டரில் தனக்கென ஓர் கணக்கொன்றை ஆரம்பித்தார். ஆரம்பித்த 5 மணித்தியாலங்களில் 10 இலம்சம் பேர் அவரைப் பின்தொடர்ந்தமை சாதனையாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், ஒபாமாவின் சாதனை நேற்று முன்தினம், 65 வயதான கேட்லின் ஜென்னரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், தான் பெண்ணாக மாறிவிட்டதாக ஜென்னர் அறிவித்தார். இனிமேல் தன்னை கேட்லின் ஜென்னர் என்றுதான் அழைக்க வேண்டும் என, ட்விட்டரின் வழியே அன்புக் கட்டளை போட்டுள்ளார் அவர்.
அமெரிக்க பிரபலமா கிம் கர்டாஷியன் கேட்லின் ஜென்னரின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜென்னர், முன்பு ஆணாகத்தான் இருந்தார். அப்போது அவரது பெயர் புரூஸ் ஜென்னர். தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற ஜென்னர், பின்னாளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இளம் பருவத்திலேயே, ஜென்னருக்கு பெண் சுபாவம் உண்டு. பெண்ணாக மாறுவதற்கும் அவர் ஆசை கொண்டிருந்தார். உடல் ரீதியாக அவர் பெண்ணாக மாறுவதற்கு 1980 இல் இருந்து சிகிச்சைகளை ஆரம்பித்தார்.
இதனிடையே, கடந்த 1990 இல் கிறிஸ் கர்டாஷியனுடன் (கிம்மின் தாயார்) பழக்கம் ஏற்பட்டபோது, சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தனது வளர்ப்பு மகள் கிம் கர்டாஷியன் சர்வதேச பிரபலம் என்பதால், அவருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம், ஜென்னரும் பிரபலம் அடைந்தார்.
Loading...