கலாசார நிதியத்தில் 2013/2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்கவிடம், பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை (26) விசாரணைகளை மேற்கொண்டது.
சுமார் மூன்று மணித்தியாலங்களால் முன்னாள் அமைச்சரிடம் இந்த விசாரணைகளை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
