Friday, 3 July 2015

14 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி!

Eastern-Province
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 14வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் சார்பில் கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் மாகாணசபை உறுப்பினர்களே நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
இவர்களில் கிழக்கு மாகா முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலரும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பதி, இம்ரான் மஹ்ரூப், முன்னாள் முதல்வர் நஜீப் ஏ மஜீத் ஆகியோரும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், அலிசாகிர் மௌலானா, இரா.துரைரட்ணம், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும்,
அம்பாறை மாவட்டத்தில், சுகாதார அமைச்சர் மன்சூர், எதிர்க்கட்சித் தலைவர் விமலவீர திசநாயக்க, தயா கமகே, ஆரிப் சம்சுதீன், ஏ.எல்எம்.நளீர்,த.கலையரசன் ஆகியோரே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, கிழக்கு மாகாணசபைக்கு பெருமளவில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் சூழல் ஒன்று எழுந்துள்ளது.
Loading...