Wednesday, 29 July 2015

பஹ்ரைனில் வெடிகுண்டுத் தாக்குதல்: காவல்துறையினர் 2 பேர் பலி

பஹ்ரைன் தலைநகர் மனமாவிற்குத் தெற்கில் நடந்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
4 வருடங்களுக்கு முன்பாக ஷியாக்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு இம்மாதிரி நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துவருகின்றன.
இந்த தாக்குதலானது சிட்ரா என்ற ஷியாக்களின் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் நான்கு வருடங்களுக்கு முன்பாக, சீர்த்திருத்தங்களை வலியுறுத்தியும் அரசாங்கத்தில் தங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கோரியும் ஷியாக்கள் மேற்கொண்ட மிகப் பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர்.
அதற்குப் பிறகு, அங்கு அவ்வப்போது இம்மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன.
Loading...