யு.எஸ்.-உலகில் பல விதமான பழ மரங்கள் உள்ளன. அவற்றில் செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், நெக்ரறின், அப்றிகொட்ஸ் ,ஆமன்ஸ் போன்ற பல வகை பழங்கள் வளர்கின்றன.
ஆனால் இந்த விசித்திரமான மரத்தில் இவை அனைத்தும் ஒன்றாக வளர்கின்றன.
Syracuse University பல்கலைக்கழக பேராசிரியரும் கலைஞருமானSam Van Akenஎன்பவர் ‘மரத்துண்டு ஒட்டுவைத்தல்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வகை கலப்பு மரங்களை உருவாக்கியுள்ளார்.
இந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 வித்தியாசமான வகையிலான வித்தியாசமான கொட்டைகள் உள்ள பழங்களை சுமக்கின்றன.
ஒரு தனி மரத்தில் விவசாயின் சந்தையில் இருக்க கூடிய சகல பழங்களையும் பெறுவது நினைத்துப்பார்க்க முடியாத ஒரு தன்மையாகும்.
சிறுவனாக இருக்கும் போது பண்ணையில் வளர்ந்த தனக்கு இந்த யோசனையால் தான் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த செயல்முறையை ஏழு வருடங்களிற்கு முன்னர் ஆரம்பித்தார். “Tree of 40 Fruit,”என்ற இவரது தற்போதய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மரங்கள் அமைகின்றன.
எதிர்காலத்தில் தனது ஆரம்ப கலப்பினங்கள் உச்ச பூக்கள் மற்றும் மரங்களாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
