Sunday, 5 July 2015

சீனாவின் வடமேற்கு பகுதியான ஜிங்ஜியாங் உய்கூர் பகுதியில் நேற்று 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

பீஜிங், 

சீனாவின் வடமேற்கு பகுதியான ஜிங்ஜியாங் உய்கூர் பகுதியில் நேற்று 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். 71 பேர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை அடுத்து 66 ஆயிரம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

பூமிக்கு அடியில் 10 கிலோ மீ்ட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், சுமார் 12 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. பெரும்பாலானவர்கள் அங்குள்ள பள்ளிகள் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவத்தினரும், பேரழிவு மேலாண்மை படையினரும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினர். 

இந்நிலையில், நேற்றைய நிலநடுக்கத்திற்கு பிறகு 4 ஆயிரம் முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சீனாவின் பூகம்ப ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இவைகளில் பெரும்பாலானவை 4 ரிக்டருக்கும் மேற்பட்ட அளவுகளை கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். எனினும், ஜிங்ஜியாங் மாகாண அரசு பேரழிவு மேலாண்மை நடவடிக்கையில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 
Loading...