|
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்பினர் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம்களுடைய ஒற்றுமையை சீர் குலைத்து முஸ்லிம்களுடைய வாக்குகளைச் சின்னாபிண்ணாமாக சிதறடிக்கச் செய்வது என்பது மட்டுமல்ல,
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களுடைய கனவுகளுக்கு முற்புள்ளி வைத்து அரவது இலட்சியங்களை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என கல்முனைத் தேர்தல் தொகுதியிலுள்ள புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடைய நயவஞ்சகத்தனமான அரசியலை நியாயமுள்ள எந்த மனிதர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே இவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பாக பொது மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பதுடன் தொடர்ந்து இது தொடர்பாக பொது மக்களுக்கு தெளிவு படுத்தவுள்ளதாக இந்த புத்திஜீகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.
|
Tuesday, 14 July 2015
![]() |
ACMC குறித்து புத்திஜீவிகளின் கருத்து |
Loading...
