Friday, 10 July 2015

இந்தோனேஷிய எரிமலை சீற்றத்தால் மூன்று விமான நிலையங்கள் மூடல்

இந்த விமானநிலைய மூடல்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்
இந்த விமானநிலைய மூடல்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்
இந்தோனேசியாவின் கிழக்கே உள்ள ருவாங் சிகரதில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் காரணமாக அந்நாட்டின் சுற்றுலாத் தீவான பாலி உட்பட நாட்டின் மூன்று விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் ஐந்து விமான நிலையங்கள் மூடப்பட்டபோதிலும் லொம்போக் தீவிலுள்ள இரண்டு விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டன.
பயங்கரமான எரிமலையிலிருந்து பரவிய சாம்பல் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் பாலிக்கு இடையிலான விமானப் போக்குவரத்துக்கள் பல சமீப நாட்களில் இரத்துச் செய்யபட்டிருந்தன.
இந்த எரிமலை சீற்றம் வாரக்கணக்கில் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...