
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியில் யானைச் சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் - 2015 தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி கட்சியின் தலைமையகம் "தாருஸ்ஸலாம்"இல் நடைபெற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் புரிந்துணர்வு அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் உடன் படிக்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு, வன்னி ஆகிய இரு மாவட்டங்களில் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும் பாலான முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் நேரடியாக இனைய உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன
அபூபக்கர் -சம்மாந்துறை
அபூபக்கர் -சம்மாந்துறை
