அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை கூட்டத்தில் பேசுகையில் “கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றால் தான் தனது காதினை வெட்டிக் கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.கலாநிதி இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றம் சென்றதால் அமைச்சர் ஹக்கீம் தனது காதினை வெட்டிக் கொண்டார் என்ற குறையோடு அமைச்சர் ஹக்கீம் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் அளவு மானம் கெட்டவரும் அல்ல.எனவே, தனது காதினை வெட்டிக் கொள்வேன் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டிருப்பதானது கலாநிதி இஸ்மாயில் வெற்றி பெற்றால் தான் வீடு செல்வேன் என்பதற்கு நிகரான பொருளோடும் நோக்கலாம்.அமைச்சர் வீடு செல்வாரா? என்ற கலாநிதி இஸ்மாயிலின் இன்றைய விவாவிற்கு அமைச்சர் ஹக்கீம் அன்றே பதில் வழங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
அமைச்சர் ஹக்கீம் தனது காதை இழப்பாரா ? சம்மாந்துறை மக்கள் கைலதான் உள்ளது
