இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சாவை, யாழ்ப்பாணம் சிறப்புக் காவல்துறையினர் வியாழனன்று அதிகாலை கைப்பற்றியிருக்கின்றனர்.
பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இந்த கஞ்சா அடங்கிய பொதிகளை படகிலிருந்து இறக்கிக் கொண்டிருந்த நான்கு பேரைக் கைது செய்துள்ளனர் கடத்தல் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினர் மூலமாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே காவல்துறையினரின் நடவடிக்கை வந்துள்ளது.
கேரளாவில் இருந்து நீண்டகாலமாகவே கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா அவ்வப்போது கடத்தி வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பகுதிக்குக் கொண்டு வரப்படுகின்ற கஞ்சா அங்கிருந்து வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரையும் நீதிமன்றத்தில் முன்னர் நிறுத்தப்படுத்துவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
