Friday, 17 July 2015

இரான் மீதான தடை நீக்கம்: இலங்கைத் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்குமா?

இரான்மீது பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த சர்வதேசப் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தப்போவதாக மேற்குலக நாடுகள் அறிவித்துள்ளன.

இதையடுத்து இரானுடன் வர்த்தகம் செய்துவந்த பல நாடுகள் தமது பொருளாதார வியூகங்களை மாற்றியமைத்து வருகின்றன.
இலங்கைத் தேயிலைக்கான ஏற்றுமதிச் சந்தைகளில் இரான் முக்கிய நாடாக இருந்த நிலையில், இரான் மீதான தடைகள் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தேயிலை ஏற்றுமதி சார்ந்த இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வந்தது.
இரான் மீதான சர்வதேசத் தடைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இதனால் இலங்கைத் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்குமா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகப் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் கணேசமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
Loading...