
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நியமிப்பதற்கு கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக சற்று முன் அசாத் சாலி உறுதி செய்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கும் அவர் கண்டி மாவட்டத்திலேயே போட்டியிட விரும்பியிருந்த நிலையில் சற்று முன்னர் கட்சித் தலைவர் ரணில் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருடனான சந்திப்பில் வைத்து இம்முடிவு எட்டப்பட்டிருக்கின்றதோடு அசாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தேசிய ரீதியிலான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வினவிய போது, கட்சியைப் பொறுத்த வரை தம்மை கண்டி மாவட்டத்தோடு வரையறுக்க விரும்பவில்லையெனவும் தேசிய ரீதியிலான பங்களிப்பையே ரணில் விக்கிரமசிங்க விரும்புவதனால் அதை மிகுந்த சிரமத்துடன் தாம் ஏற்றுக்கொண்டதாகவும் இது தொடர்பில் ஐ.தே.க விசேட அறிக்கையொன்று வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கண்டியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் இம்முடிவு நன்மை பயக்கும் என்பதால் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இம்முடிவுக்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஹகீம் தனது இருப்பிடத்தை கண்டியில் பலப் படுத்திக் கொண்டார் , கிழக்கில் மு .கா வினருக்கு அரோ கோரா
