Thursday, 9 July 2015

பொதுபல சேனா பிக்குகளுக்கு பிடியாணை உத்தரவு















கொள்ளுபிடியில் அமைந்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைத்தொழில் அமைச்சுக் காரியாலயத்தை சுற்றிவளைத்த பொதுபல சேனா அமைப்பின் பெளத்த பிக்குகளுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த பெளத்த பிக்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. என்றாலும் குற்றவாளிகள் சார்பில் இன்று ஆஜராகவிருத்த 7 பேரில் இருவர் நீதிமன்றத்திற்கு ஆஜராகாத காரணத்தால் இன்றைய தினம் குற்றப்பத்திரிகை வாசிக்கப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.

அதேவேளை இன்று ஆஜராகாத 4ஆம் மற்றும் 5ஆம் குற்றவாளிகளான சாமித தேரர் மற்றும் ஜயதிஸ்ஸ தேரர் ஆகியோருக்கு நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
Loading...