கிர்க
லாரன்ஸ் ஆஃப் அரேபியா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒமர் ஷெரீஃப் இன்று காலமானார். அவருக்கு வயது எண்பத்தி மூன்று.
எகிப்தில் பிறந்த ஒமர் ஷெரீஃப், 25 உள்ளூர் மொழிப் படங்களில் நடித்த பிறகு ஆங்கிலப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அவர் நடித்த டாக்டர் ஷிவாகோ, லாரன்ஸ் ஆஃப் அரேபியா படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றதோடு, லாரன்ஸிற்குப் பெரும் புகழையும் ஈட்டித் தந்தது.
1962ஆம் ஆண்டு வெளிவந்த லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்திற்காக இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் அவருக்குக் கிடைத்தன.
சே குவாராவாகவும் கெங்கிஸ்கானாகவும்கூட ஒமர் ஷெரீஃப் நடித்திருக்கிறார்.
பல பெண்களின் மனம் கவர்ந்த ஒமருக்கு, ஒரே மாதத்தில் 25 ஆயிரம் பெண்களிடமிருந்து திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கும் அழைப்புகள் வந்தன என ஒமர் ஷெரீஃப் ஒருமுறை தெரிவித்தார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒமர் ஷெரீஃப், கெய்ரோவில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
