Tuesday, 28 July 2015

ஒற்றுமையைக் குலைக்கும் ரவூப்மும் ரசாதும் விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களே 

நமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இங்கு உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புவது என்ன வென்றால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் உண்மையிலேயே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் மீது அக்கறை உள்ளவர்களாயின் முஸ்லிம்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும் விட்டுக் கொடுத்து ஒற்றுமையான முறையில் ஒரு சின்னத்தில் அதாவது மரத்தில் அல்லது மயிலில் தேர்தலில் களம் இறங்கி இருப்பின் நிச்சயமாக முஸ்லிம்கள் நான்கு பாரளுமன்ற உறுப்பினர்களை பெற்று இருக்கலாம் .  

இரண்டு கட்சிகளின் தலைமைகளும் யானையில் கூட்டுச் சேரலாம் என்றால் ஏன் இவர்கள்  முஸ்லிம்களின் நன்மை கருதி கூட்டுச் சேரக் கூடாது .

நீங்கள் இக் கட்சித் தலைமைகளின் பதவி வெறி என்ற பொறிக்குள் சிக்கி உள்ளீர்கள் , உங்களை இவர்கள் பிரித் தாளும் நிலைமைக்கு தள்ளி விட்டனர் . 

ஆகையால் இவர்களுக்கு நீங்கள் ஓன்று பட்டு இம்முறை ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் . இவர்களை அம்பாறைத் தொகுதியை  விட்டும் விரட்டுங்கள் 

உங்களை கூறு போடும் அவர்களை  விரட்டி அடியுங்கள்  மக்கள் எமது கட்சியான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியுடன் கை கோருங்கள் நாம் இப்படிப் பட்டோருக்கு நல்தோர் பாடம் படிப்பிப்போம்  ஒட்டகச் சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள் 

    தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா



Loading...