'ஜேர்மன்விங்ஸ் பேரழிவு' போன்றதொரு சம்பவம் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கான கண்காணிப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜேர்மன்விங்ஸ் விமானத்தின் துணை- விமானி வேண்டுமென்றே விமானத்தை மலையொன்றில் மோதி, அதில் பயணித்த அனைவரையும் கொன்றிருந்தார்.
விமானிகள் அனைவரும் உளவியல் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவற்றின் முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான தரவுகளில் பகிரப்பட வேண்டும் என்றும் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் மது பாவனை தொடர்பில் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ பரிசோதர்களின் கடுமையான கண்காணிப்பு களத்தில் இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோரியுள்ளது.
cockpit - அதாவது, விமானிகளின் அறையில் எல்லா நேரத்திலும் இரண்டு விமானிகள் இருக்க வேண்டும் என்கின்ற விதி, பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டாலும், அதனை இடைவிடாது தொடர வேண்டும் என்றும் கண்காணிப்பு குழுவின் அறிக்கை கூறியுள்ளது.
