|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதில் அர்த்தமில்லை. தோல்வியடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியைத்தழுவும் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார்.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதில் எவ்வித நன்மையும் கிடையாது.
அபிவிருத்தியை ஏற்படுத்தவும் பத்து லட்சம் வேலை வாய்ப்பு வழங்கவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமொன்றை வகுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென ஆதரவாளர்களிடம் கோருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு எந்தக் காலத்தைவிடவும் தற்போது பிளவடைந்துள்ளது.
நாட்டின் எதிர்க்கட்சியாக இருப்பதற்கு கூட தகுதியற்ற நிலையை சுதந்திரக் கட்சி அடைந்துள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
|
Saturday, 18 July 2015
![]() |
கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதில் அர்த்தமில்லையென ஜனாதிபதியே கூறினார்: லக்ஸ்மன் கிரியெல்ல |
Loading...
