Sunday, 5 July 2015

இனிதென! மனிதர் வாழ்வு இலங்கிட அருளும் மாதம்!.



புனிதமாம் ரமழான் மாதம்:
போற்றிடும்! இறையோன் வேதம் :
இனிதென! மனிதர் வாழ்வு
இலங்கிட அருளும் மாதம்!.

நோன்பினை நோற் போருள்ளே!
நுளைந்திடும் நல்லுணர்ச்சி :
மாண்புறை குழந்தை யொத்த!
மனம் வரும்! பாவம் தீரும் ;

சுவர்க்கமோ! நோன்பாளர்க்கு
சுகமுடன் காத்திருக்கும் ,
தவத்திரு நோன்பு நோற்போர்
தலத்தினில் மேலோராவர் !

சைத்தாணை சிறையில் பூட்டித்
தடுத்திடும்! மாதம் ரமழான் !
வைத்தாளும் இறையோ னன்பை
வாங்கி நாம் மகிழும் மாதம்!

பாவங்கள் தீர்ந்து நல்ல!
பலன் வரும் நோன்பினாலே
சாபங்கள் தீரும்! வானோர்
சலுகைகள் வந்து சேரும்!

ஐந்து நற் கொடைகள் தன்னை
அருளித் தன் "உம்மத்திற்கு"
தந்துளா னிறையோன்! நோன்பைத்
தவறிடல் பாவமாகும்....!



கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 
Loading...