|
சம்மாந்துறையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் இருப்பதாகச் கணக்குக் காட்டப்படுகின்றது ஓகே அப்படியே வைத்துக் கொள்வோம் கணக்குக் காட்டப்படும் இந்த 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் அளிக்கப்படுமா…??? நிச்சயம் இல்லை.
01. சம்மாந்துறையில் உள்ளவர்கள் நிறையப் பேர் வெளிநாடுகளில் உள்ளார்கள் (நான் கூட வெளிநாட்டில்தான் உள்ளேன்) அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
02. தேர்தலில் அளிக்கப்படும் எல்லா வாக்குகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அதில் நிராகரிக்கப்படும் வாக்குகளும் இடம் பெறும்.
03. நமது சம்மாந்துறை விவசாய ஊர் என்பதனால் விவசாயத்தை காதலிக்கும் நம்ம விவசாயிகளில் ஒரு பகுதிப் பேர் மம்பட்டியக் கட்டிக்கு தேர்தல் அன்றைக்கு வயலுக்குப் போய் விடுவார்கள்.
04. வீட்டை விட்டு வெளியில் சென்று பழக்கம் இல்லாத நிறையப் பெண்கள் மெனக்கெட்டுச் சென்று வாக்களிப்பார்களா என்றால் சந்தேசகம்தான்.
05. இன்னும் சில ஆண்களும் பெண்களும் இவர்களுக்கு வாக்களிச்சி நம்ம என்னத்த கண்டோம் என்று சும்மா இருந்து விடுவார்கள்.
06. சில பேருக்கு இது நம்ம ஜனநாயக்கடமை என்றாலும் அது கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் அவர்களாலும் வாக்களிக்கப்படாது.
07. நடக்க கூடிய முடியாத மூத்தம்மா மார்களும், மூத்தப்பா மார்களும் வாக்களிக்கச் செல்ல மாட்டார்கள். நான் மேற் சொன்ன இவை எல்லாவற்றுக்கும் கொஞ்சம் வாக்குகளை கழித்து விட்டு மிச்சம் மீதியைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒரு 40 ஆயிரத்துக்கும் மேலும் தேராது. ஆக இந்த 40 ஆயிரத்தையும் வைத்துக் கொண்டு நாம எப்படி ரெண்டு பேரை எம்பியாக தெரிவு செய்வது…??? ஒரு ஆளைத்தான் தெரிவு செய்யலாம் அந்த ஆள் அதி கூடிய வாக்குகளையும், விருப்பு வாக்குகளையும் பெறக் கூடியவராக இருக்க வேண்டும், வாக்கு பலம் கொண்ட கட்சியைச் சேர்ந்தவராகவும். மக்களுக்கு நன்கு பரீட்சையமான ஒருவராக இருக்க வேண்டும், மக்களுக்கு தன்னாலான சேவைகளை மக்களுக்கு செய்தவராக இருக்க வேண்டும் மற்றும் வெளியூர் மக்களுக்கும் பரீட்சையமானவர்களாகவும் இருக்க வேண்டும்.
அப்படிப் பார்த்தால் முஸ்லிம் காங்ரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் வேட்பாளர்தான் சம்மாந்துறையைப் பொருத்தவரையிலும் ஏனைய ஊர்களைப் பொறுத்த வரையிலும் செல்வாக்குச் செலுத்தும் நபராக காணப்படுகின்றார் என்பது உங்களுககுப் புரியாமலிருக்காது.
இதற்காக நீங்கள் என்னை முஸ்லிம் காங்ரஸ் வேட்பாளரான மன்சூருக்கு வக்காலத்துக் வாங்குபவராக சித்தரித்தாலும் பரவாயில்லை…உண்மையில் நான் நமது சம்மாந்துறை மண்னுக்கே வக்காலத்து வாங்குகின்றேன்.
ஆகவே…ஊரே ஒத்து நின்று இம்முறை எம்பியைப் பெற வேண்டும் எனத் துடிக்கையில் நமது ஊருக்கான பங்களிப்பை நாம் ஏன் நமதுாருக்குச் செய்யக் கூடாது.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.
|
Wednesday, 15 July 2015
![]() |
நான் நமது சம்மாந்துறை மண்னுக்கே வக்காலத்து வாங்குகின்றேன்-- அன்சார். |
Loading...
