Friday, 10 July 2015

ஈரங்களை தேடும் இதயங்கலாய் .


நோன்பு மாதங்களில் 
மரியாதை பேணாத 
சாக்கடை நாவுகள் 
புனித மாதத்தில் 
குடித்து மகிழும் !
உண்டு சுவைக்கும் !!

பாவங்கள் 
அழிக்கப்படுகின்ற 
தௌபா நூல்கள் 
ஓட்டுரை கட்டித் தொங்கும் !
மனசு பாழடைந்த வீடுகளாய் மாறும் 

கேலிக் கூத்துக்களின் 
உல்லாசப் பயணங்களை 
விரும்புகின்ற -
அடிமைத் தனத்தினால் 
செவிட்டுக் காதுகள்
ஊமையாய் கைக் கரணம் போடும் !


பொறாமை உணர்வுகளால் 
செயலிழக்கப்பட்ட 
போலி மனுஷத்துவம் 
பூசப்பட்ட 
பௌடர் முகங்கள் 
வரலாற்றுப் பக்கத்தில் 
வியர்வை வடிந்த துளிகளை
சுரந்து பீச்சும் ....!


நேசக் கரங்கள் மட்டும் 
இறை தஸ்பீக்களின் 
எண்ணிக்கைகளை அதிகரிக்கும் ..!.

 வரண்டு போன பாலைவனங்களில்
ஈரங்ககளை தேடும் 
இதயங்கலாய் ....!!
தாகம் போக்கும் 
நீர் துளிகளாய்  ...!!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
Loading...