Monday, 27 July 2015

வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வரவேற்கத்தக்க விடயமாகும்--ஹசன் அலி












வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தமிழர் தாயகத்தை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும்.தமிழர் தாயகத்தை உருவாக்கும் வகையில் தமிழ் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் தலைமைகள் தயாராகவே உள்ளது.

தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தமிழ் கட்சிகளும்,முஸ்லிம் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக வேண்டும். நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும்.

அதேபோல் வடக்கையும் கிழக்கையும் ஒன்றினைத்து தமிழர் தாயகத்தை உருவாக்குவதென்பது சாதாரண விடயம் அல்ல.தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் விட்டுக்கொடுப்பையும் சுய உரிமைகளையும் பலப்படுத்துவதுடன் விட்டுக்கொடுப்பு அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்,முஸ்லிம் அரசியல் நடவடிக்கைகளை சமமாக அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் அதுவே சாதகமான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்


Loading...