Wednesday, 29 July 2015

அங்கஜன் வீட்டில் கதறி அழுத தாய்…

உங்களுக்கு அருகில் உள்ள எனது மகளை என்னிடம் ஒப்படையுங்கள் என தாயொருவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து இருந்தார்.
அதன் போதே காணாமல் போயுள்ள மாணவி ஒருவரின் தாயார் அவ்வாறு உருக்கமான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைத்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரி பால சிறிசேனா பாடசாலை மாணவிகள் சிலருக்கு மத்தியில் நிற்கும் படம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன
அந்த துண்டு பிரசுரத்தில் காணப்படும் படத்தில் உள்ள மாணவிகளில் ஒருவர் தனது மகள் என கூறி மாணவியின் தாயார் அந்த துண்டு பிரசுரத்தை ஜனாதிபதியிடம் கையளித்து இந்த படத்தில் உள்ளவர் காணாமல் போன எனது மகள் தான் என்னுடைய மகளை மீட்டு தாருங்கள் என கண்ணீர் மல்க உருக்கமாக கோரினார்.
Angajan 01Angajan 02Angajan 03Angajan 04Angajan 05Angajan
Loading...