|
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாக்காளர்களுக்கு இன்று (31) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக அவரது உத்தியோகபுர்வ செய்தி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற மக்கள் ஆணையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து இந்த அறிவிப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கட்சிகளின் பிரச்சார மேடைகள் தவிர்ந்த சிவில் அமைப்புக்களின் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
|
