Wednesday, 29 July 2015

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப போரிட தயாராம் : மகிந்த ஆவேசம்


news
குறுகியகால புதிய ஆட்சியால் நாடு 25 வருடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளது என்று சுட்டிக் காட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதற்காக அரசியல் ரீதியாக போராடவும் போரிடவும் தயாராகவே இருக்கிறார் எனவும் சூளுரைத்துள்ளார். 
 
அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு எதுவும் இல்லை என்றும், ஒரே நாடு, ஒரே அணி என்பதுதான் தனது கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
'எதிர்காலத்துக்கு உத்தரவாதம்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞபானம் நேற்றுக் கொழும்பு ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Loading...