Monday, 13 July 2015

ஒட்டகமும் ஓடுகிறது அம்பாறை மாவட்ட தேர்தல் பந்தயத்தில் யானை, குதிரை மற்றும் மயிலுடன்




அரசியல் களத்தில் தனது கன்னி பிரவேசத்தை ஆரம்பித்திருக்கும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள்  கட்சி இன்று தமது முதலாவது வேட்புமனுவை அம்பாறை மாவட்டத்தில் கையளித்திருக்கிறது. 

  NDPHR ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

அண்மைக் காலத்தில்  தோற்றம் பெற்ற இக்கட்சியானது   நிதியியல் மற்றும் முதலீட்டு ஆலோசகருமான  மொஹிடீன் பாவா அவர்களினால் அத்திவாரம் இடப் பட்டு அவரது தலைமையில் செயற்பட ஆரம்பித்திருக்கும் இந்த கட்சி இன்று முதல் தனது அரசியலை மக்கள் மயப்படுத்தி தமது இலக்கான கிழக்கை ஏற்றுமதி வலயமாக மாற்றி தொழில் சந்தை,பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய இலங்கை  எனும் தமது இலக்கை நோக்கி பயணிக்க இருப்பதாக கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.


முஸ்லிம் லிபரல் கட்சி  தலைவர் எம்.இஸ்மா லெப்பையை 

முஸ்லிம் லிபரல் கட்சியுடன் கூட்டமைத்து அதன் தலைவர் எம்.இஸ்மா லெப்பையை தலைமை வேட்பாளராக கொண்டு  முதலாவது அரசியல் பிரவேசத்தை மேற்கொள்ளும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தமது சின்னமான ஒட்டகம் சின்னத்தில் களமிறங்கிறது.முஸ்லிம் மக்களின் அதிக ஆதரவை பெற்ற கட்சிகளே தமது சொந்த சின்னத்தில் போட்டியிட தயங்கும் இந்த தேர்தலில் இந்த கட்சி தமது சொந்த சின்னத்தில் போட்டியிட முன்வந்திருப்பது பாராட்ட தக்க ஒன்றே.

வேட்புமனுவை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் ஊடக இணைப்பாளர் :- 
எங்களது கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டதில் சகல தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக எங்களது வேட்பாளர் நியமனம் அமைந்துள்ளது.கல்வியலாளர்கள்,இளம் தலைமுறையினர்,வர்த்தகர்கள் என சகல துறை சார் வேட்பாளர்களையும் நியமித்துள்ளோம். எங்களுடன் இணைந்து போட்டி இடும் ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,ஜே.வி,பியினர்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,போன்ற கட்சிகளுக்கு எங்களது கட்சி இத்தேர்தலிலும் எதிர்வரும் காங்களிலும் சவாலை  அமையும் என்பதை வரும் காலங்கள் உங்களுக்கு உணர்த்தும் என்பதை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.எங்களுடைய கட்சியின் ஆதரவை தங்களுக்கு தருமாறும் அதற்கு பகரமாக பதவிகளும் ,வேறு பல சலுகைகளும் தருவதாக ஒரு சில வங்கரோத்து  அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தும் அதனை நிராகரித்து சமுக நலன் கருதி  எங்களது பலத்தை  நிலைநாட்ட  சொந்த முகவரியுடன் களமிரங்கியுள்ளோம். வெற்றி,தோல்வியை அஞ்சி ஒதுங்க எந்த வேளையிலும் நாங்கள் தயாரில்லை என்றும் மக்களின் தீர்ப்பை ஏற்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த பயணம் இனி தொடர்ந்து சகல தேர்தல்களிலும் களமிறங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.



Loading...