இரானுடனான ஒப்பந்தம் மத்திய கிழக்கில் 'மாற்றத்தை' ஏற்படுத்துமா?
இரானை முடக்கிவந்த தண்டனைத் தடைகள் அகற்றப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய விதத்தில், செல்வாக்குமிக்க நாடுகளுடன் தமது அரசாங்கம் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இரானியர்கள் கொண்டாடிவருகின்றனர்.
தடைகள் நீக்கப்படுவதன் பிரதிபலனாக இரான் தனது அணுசக்தி செயற்பாடுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இரான் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியவர்களின் நேர்மையையும் கடின உழைப்பையும் பாராட்டுவதாக அந்நாட்டின் அதியுயர் தலைவர் அயதொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 2011-ம் ஆண்டு அரபுலகப் புரட்சிக்குப் பின்னர் பெரும் குழப்பங்களை சந்தித்துள்ள மத்திய கிழக்கில் இரானுடனான புதிய அணு ஒப்பந்தம் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்கின்றனர் செய்தியாளர்கள்.