ஈரான் சமீபத்தில் செய்துகொண்டிருக்கும் அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தின் காரணமாக மத்திய கிழக்கு தொடர்பான தங்களது கொள்கை மாறப்போவதில்லை என அந்நாட்டின் தலைவர் அயதுல்லா கமெனெய் தெரிவித்திருக்கிறார்.
அஸாத் தலைமையிலான சிரிய அரசு, ஏமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்கள், பாலஸ்தீனிய குழுவான ஹமாஸ் உள்ளிட்ட தங்களது கூட்டாளிகளைத் தொடர்ந்து ஆதரிப்போம் என கமெனெய் தெரிவத்திருக்கிறார்.
ரமலானையொட்டி தேசியத் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையின்போதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.
அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் ஏதும் நடத்தும் திட்டமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கண்காணிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதையடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
