Thursday, 16 July 2015

உளவு கேமிராக்களை எல்லையில் அகற்றியது பாகிஸ்தான்!



பார்மர்: உளவு கேமிராக்களை எல்லையில் இருந்து பாகிஸ்தான் அகற்றி உள்ளது.


இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ராஜஸ்தான் மாநில எல்லையையொட்டி பாகிஸ்தான் அமைத்து இருந்த உளவு பார்ப்பதற்கான கேமராக்களை அந்நாட்டு ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை அகற்றி உள்ளது.

இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி கூறும்போது, ''பாகிஸ்தான் எல்லையையொட்டி இருக்கும் பார்மர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் 15 நாட்களுக்கு முன் 20 அடி உயரத்தில் உளவு பார்ப்பதற்கான கேமிராக்களை அந்நாடு பொருத்தி இருந்தது.

இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர், பிகானீர், கங்காநகர் ஆகிய மாவட்டங்களின் எல்லைகளிலும் உளவு கேமிராக்களை பாகிஸ்தான் பொருத்தி இருந்தது. இதற்கு, எல்லைப் பாதுகாப்புப் படை எதிர்ப்பு தெரிவித்தது. இதை அடுத்து, அந்த கேமராக்களை பாகிஸ்தான் ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை அகற்றி உள்ளது" என்றார்.
Loading...