Saturday, 11 July 2015

சம்மாந்துறைக்கு எம்,பி வேண்டும்



சம்மாந்துறைப் பிரதேச மக்கள் தமதூருக்கு ஒரு எம்.பி வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பிலும் ,இம்முறையும் ஏமாறுவோமா என்ற  ஏக்கத்திலும் இருக்கின்றனர் . இவ்வூர் மக்களின்  ஆசைகளுடன்  பல அரசியல் வாதிகளும் பல  அரசியல் கட்சிகளும் விளையாடுகின்றன .சம்மாந்துறைப் பிரதேச மக்கள் ஆசைப் படுவதும் கோரிக்கை விடுவதிலும் நியாயம் உண்டு .இவர்களின்  எம்.பி ஆசை நிறைவேற வேண்டும் என்றால் சம்மாந்துறைப் பிரதேச மக்கள் எல்லோரும் ஓன்று சேர்ந்து ஒரு தகுதியானவரை சுயட்சையில்  எதிர் வரும் தேர்தலில் தேர்ந்து எடுப்பதன் மூலம் உங்களுடன் விளையாடும் அரசியல் வாதிகளுக்கும் ,அரசியல் கட்சிகளுக்கும் ஒரு நல்ல பாடம் படிப்பிக்க முடியும் 

அவ்வாறில்லா விடின் இம் முறையும் பழைய குருடி கதவைத் துறடி என்ற கதைதான் 


சம்மாந்துறையூர் முஸ்தபா 



Loading...