Saturday, 4 July 2015

வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள்

Image result for CANDIDATES SELECTION IMAGE

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை,கொழும்பு உட்பட 4  மாவட்டங்களில் தமது அடையாளங்களுடன் தமது சொந்த முகவரிகளுடன் மக்கள் ஆணையை பெற களமிறங்க இருக்கும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவுக்கு வர இருப்பதாக கட்சியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தமது அறிக்கையில் இதுவரை 6 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 483 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று அவர்களுக்கான இறுதி நேர்முக தேர்வு தற்போது கொழும்பு -7 ஹோர்டன் பிளேஸ்சில் அமைத்துள்ள  கட்சி காரியாலயத்தில் இடம்பெற்று வருவதாகவும் அந்த விண்ணப்பங்களில் அதிகளவான இளம் தலை முறையினரும் விண்ணப்பித் துள்ளதாகவும் அவர்களுடன்  சட்டத்தரணிகள்,கல்வியலாளர்கள்,வர்த்தகர்கள்,என பல் துறை சாராரும் விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்


ஊடக இணைப்பார்
Loading...