நான் பிரதமரானால் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படுவதில் தமக்கு பிரச்சினையிருக்காது. தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களை தாம் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்ததாகவும், அதனை உணர்ந்து தமிழர்கள் பெரும்பாலானோர் தமக்கு 2015 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களித்தனர்.
எனினும் சில தமிழ் தலைமைகளின் பிழையான வழி நடத்தலால் பெரும்பான்மை தமிழர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை.முஸ்லிம் தலைவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமது ஆட்சியில் வாய்ப்பை பயன்படுத்தி வாக்குகளை அதிகரித்துக்கொண்டனர்.
தமது அரசாங்கத்தின் அனுசரணையில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதாக அவர்கள் கதையை பரப்பினர்.எனினும் இந்தத் தலைவர்கள் கூறியது பொய் என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளனர்.
என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
|
Monday, 6 July 2015
நான் பிரதமரானால் -மஹிந்த ராஜபக்ச |
Loading...