மற்ற கட்சிகளைப் போன்று பெரும் ஆர்ப்பாட்டத்துடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட தம்மிடம் போதிய பண வசதி இல்லை யென்கிறார் யுத்த நிறைவின் பின்னரும் இலங்கையில் பயங்கரவாதத்தைத் தொடர்ந்து வரும் ஞானசார.
2025ம் ஆண்டு தீர்மானிக்கும் சக்தியாக மாறும் இலட்சியத்தோடு இம்முறை தேர்தலில் குதித்திருக்கும் குறித்த அமைப்பினர் வாராந்தம் நடாத்திவரும் ஊடக சந்திப்பைத் தவிர ஆர்ப்பாட்டமான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தம்மிடம் பண வசதியில்லையென்று கூறியுள்ளது.
எனினும், மஹிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சக்களின் அனுசரணையிலேயே இவ்வமைப்பு இயங்கி வருவதாக நிலவி வந்த கருத்துக்களை மறுத்த ராஜபக்ச குடும்பம், குறித்த அமைப்பினர் நோர்வேயின் நிதியுதவியில் இயங்குவதாக விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
