அஸ்ரப் ஏ. சமத்
துருக்கி நாட்புறவு இயக்கம் இலங்கையில் உள்ள முஸ்லீம் ஊடகவியலாளா்களை அழைத்து நோன்பு திறக்கும் வைபவத்தை நேற்று நடாத்தியது. இந் நிகழ்வு கோட்டேயில் உள்ள துருக்கி நாட்டின் லேனியம் சா்வதேச பாடசாலையில் நடைபெற்றது.
இங்கு சன்டே ஒப்சேவா் பிரதம ஆசிரியா் லக்ஸ்மன் உரையாற்றினாா். சன்டே ஒப்சேவா் பிரதி ஆசிரியா் ஹனா இப்றாகீம், டெயிலி மிரா் அமீன் இஸ்சத், மற்றும் சிலேன் டுடே, தி ஜலன்ட், வசந்தம் , ருபவாஹினி, சிரச போன்ற ஊடகங்களில் உள்ள முஸ்லீம் ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.