பொது ஜன முன்னணியின் பாராளுமன்ற வேட்பாளரும், பொதுபல சேனாவின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு IS (ISIS) ஆயுததாரிகளால் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.
குறித்த உயிரச்சுறுத்தல், சிரியாவில் அண்மையில் விமானத்த தாக்குதலில் உயிரிழந்த இலங்கையின் முதலாவது ISIS தீவிரவாதியின் மைத்துனரின் பேஸ்புக் ஊடாக கடந்த மே மாதம் 27ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் டிலந்த விதானகே டெய்லி சிலோனுகுத் தெரிவித்தார்.
