பாராளுமன்றுக்கு அனுப்புவோரை நன்கு அறிந்து, தெரிவு செய்யாது விடின் அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு மக்களும் உடந்தையாகிறார்கள் என தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச.
தமது பிரதிநிதிகளை முறையாகத் தெரிவு செய்யாது விடுவது மக்களின் தவறு எனவும் அதன் பின் உருவாகும் ஊழல் உட்பட அனைத்து விடயங்களுக்கும் மக்களும் பொறுப்பாளிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
