Thursday, 13 August 2015

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் தாவல்கள் அதிகரிக்கும்--விஜித ஹேரத்










பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 113 ஆசனங்களை கைப்பற்றி தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாது.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் தாவல்கள் அதிகரிக்கும். கட்சி மாறியே அடுத்த அரசாங்கம் அமைக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம். அதாவது கூட்டு அரசாங்கம் அடுத்து அமையும் என குறிப்பிட்டார்.
Loading...