கிர்க
சீனாவின் தியான்ஜின் நகரில் இரண்டு பெரிய வெடிச் சம்பவங்கள் நடந்து 36 மணிநேரம் கடந்துவிட்ட பின்னரும் அங்கு இன்னும் தீ எரிந்துகொண்டிருக்கிறது.
அபாயகரமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் இந்த வெடிச்சம்பவங்கள் நடந்திருந்த நிலையிலும், அந்தப் பிரதேசத்தில் காற்று மற்றும் நீரின் தரம் பாதுகாப்பான நிலையிலேயே இருப்பதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறைந்தது 55 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவங்களுக்கான காரணம் பற்றி அதிகாரிகள் இன்னும் ஆராய்ந்துவருகின்றனர்.
அந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களின் முழுமையான பட்டியல் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வெடிச் சம்பவங்கள் நடந்ததிலிருந்து ஒரு விதமான நாற்றம் வீசுவதாகவும், கண்கள் எரிவதாகவும் தியான்ஜின் நகர மக்கள் புகார் அளித்துள்ளனர்.
