கனடா எல்லை பகுதி சேவைகள் அதிகாரிகள் வின்ஸ்டர் ஒன்ராறியோவின் அம்பாசடர் பாலத்தில் வைத்து பாரிய கொக்கெயின் பறிமுதல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வர்த்தக டிரக் மற்றும் டிரெய்லர் இரண்டாம் நிலை சோதனைக்கு உள்ளாக்கப் பட்ட போது சந்தேகத்திற்கிடமான 52கட்டிகள் கொக்கெயினை CBSA அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவை ஒரு வகை கம்பளித்துணியிலான பைகள் மற்றும் வேறொரு பைக்குள்ளும் வைத்து டிரக்கின் சேமிப்பு பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இந்த கொக்கெயினை பறிமுதல் செய்ததுடன் 26வயதுடைய ரொறொன்ரோவை சேர்ந்த லாவ்றிம் மெஹ்மெடி என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
