Saturday, 22 August 2015

வேட்டைக்காரனாக மனித இனம் வளர்ந்ததன் காரணம் விளங்கியது

மற்ற வேட்டையாடும் விலங்குகள் குட்டியைக் குறிவைக்க மனிதன் வளர்ந்தவற்றை குறிவைத்தானாம்.
மற்ற வேட்டையாடும் விலங்குகள் குட்டியைக் குறிவைக்க மனிதன் வளர்ந்தவற்றை குறிவைத்தானாம்.
உலகின் ஆகக்கூடிய தனித்தன்மை கொண்ட வேட்டையாடும் விலங்கினமாக இன்று விளங்கும் மனித இனம், அந்த அந்தஸ்தத்தை பெற்றதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றை தாம் அடையாளம் கண்டுள்ளதாக கனடாவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்கள் வேட்டையாடும்போது, வயது வந்த விலங்கினங்களை கொல்லும் உத்தியைக் கையாண்டுள்ளனர். தவிர தமக்கு ஆபத்து அதிகம் இல்லாத வேட்டையாடும் வழிகளில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
அதனால்தான் அவர்களால் வலைகள், கொக்கிகள், குழிகள், கணைகள் போன்ற தொழில்நுட்ப ஏற்றங்களை வகுக்க முடிந்துள்ளது என்று சயின்ஸ் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.
ஏனைய வேட்டையாடும் விலங்குகள் மற்ற விலங்குகளில் குட்டியைக் குறிவைத்து வேட்டையாடும் உத்தியைத்தான் கொண்டிருந்தன.
மனித இனம் மற்ற விலங்கினத்தில் வயது வந்தவற்றதைக் கொன்றதால் அவ்வினங்கள் அழிந்துபோகச் செய்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது விலங்கினங்களைப் அழிவிலிருந்து பாதுகாக்க நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், இயற்கையின் இந்தப் போக்குக்கு ஏற்றவாறு அமையவேண்டும் என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
Loading...